இந்த நவீன காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் பல வகைகள் உள்ளன. அதில் முதல் இடத்தை பிடிப்பது தான் இந்த முத்தம். ஒரு கணவன் தன் மனைவிக்கு தரக்கூடிய முத்தம் அவர்களுக்குள் உள்ள காதல் மற்றும் நெருக்கத்தை வெளிப்படையாக குறிப்பதாகும். இவ்வாறு முத்தம் கொடுப்பதால் இருவரையும் நெருக்கமாக இணைக்க இது உதவுகிறது. மேலும் கணவனுக்கு மனைவியின் மீதும் மனைவிக்கு கணவனின் மீதும் உள்ள காதல் அதிகரிக்கும். இதனால் பல நன்மைகள் அவர்களுக்குள் நடக்கும். இந்த வகையில் முத்தத்தை பற்றி பல ஆய்வுகள் என்ன கூறுகிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
முத்தம் கொடுப்பது பற்றி ஆய்வுகள் நடத்தியபோது ஆய்வில் குறிப்பிட்டபடி, முத்தம் கொடுப்பது மன அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவுகிறது. மேலும், முத்தம் கொடுப்பதால் கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவுகிறது. முத்தம் கொடுப்பதால் ஆயுள் அதிகரிக்குமா? என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஒரு திடக்கிடும் தகவல் வெளியிடப்பட்டது. அதாவது ஆண்கள் குறிப்பாக கணவர்கள் வேலைக்குச் செல்லும் முன்னதாக தினமும் மனைவியை முத்தமிடும் போது அவர்கள், தங்கள் மனைவிகளை முத்தமிடாத கணவர்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் சராசரியாக 5 ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாக கண்டறியப்பட்டது. சோ கணவர்களே கண்டிப்பாக உங்களது மனைவிக்கு தினமும் ஒரு முத்தம் கொடுங்கள் ஏனென்றால் நீங்கள் முத்தம் கொடுப்பதன் மூலம் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் இது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வாறு மனைவிக்கு முத்தம் கொடுத்து செல்லும் போது முத்தம் கொடுக்காத கணவர்களை காட்டிலும் இவர்கள் இருபது முதல் 35% வரை அதிக பணம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஜெர்மனிகள் ஒரு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி வீட்டை விட்டு வெளியேறும்பும் தங்கள் மனைவிகளை முத்தமிட்டாய் 87% பணியாளர்களுக்கு ஊதியத்தில் அதிகரிப்பு மற்றும் அலுவலகத்தில் சிறந்த பதவிகளை வகித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆண்களே தங்களது மனைவிக்கு தினமும் ஒரு முத்தம் கொடுங்கள். இது உங்களது ஆயுள் காலத்தை மட்டும் இல்லாமல் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தையும் அதிகரிக்கும்.




