மூக்கடைப்பை போக்கும் கருஞ்சீரகத் தைலம்..!!

சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும் மூக்கடைப்பு பிரச்சனை சளி பிடிக்கும் போது உண்டாககூடியது.

மூக்கடைப்பு என்பது மூக்கின் உள்புறம் உண்டாகும் வீக்கத்தின் காரணமாக அடைப்பை உண்டாக்குகிறது. சளி உண்டாகும் போது மூக்கடைப்பும் உடன் வருவது இயல்பானது.

மூக்கடைப்பு உண்டாகும் போது சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மூக்கில் காற்றோட்டமில்லாத உணர்வை ஏற்படுத்தும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதனால் பாதிக்கப்படுவதுண்டு. இந்த நாசி அடைப்பு ஒவ்வாமையாலும் கூட வரலாம்.

கருஞ்சீரகம் வறுத்து தூளாக்கி எண்ணெய்யில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும்.

கருஞ்சீரகத் தைலம் செய்முறை:

சுத்தமான தேங்காயெண்ணெய் 50 மில்லி அளவு எடுத்துகொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் அளவு கருஞ்சீரகப்பொடி (கருஞ்சீரகத்தை இலேசாக வறுத்து மிக்ஸியில் பொடித்து ) சேர்க்க வேண்டும்.

இவை இரண்டும் நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைக்கவும். பிறகு இதை வெள்ளைத்துணியில் வடிகட்டி, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
மூக்கடைப்பு இருக்கும் போது இரண்டு சொட்டு மட்டும் மூக்கில் விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இரண்டு வேளை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

பயன்கள்:

கருஞ்சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பீனிசம் என்னும் நோய்க்கும் மருந்தாக இருக்கிறது.

இந்நோயால் வரும் தும்மல், மூக்கிலிருந்து தொடர்ந்து நீர் வடிதல், தலைவலி, நெற்றிப்பகுதி பாரம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெயை மூக்கில் ஒரு துளியையும், நெற்றிப்பகுதியில் தேய்த்தும் வந்தால் இவை தீவிரமாகாமல் இருக்கும். சளி தொடர்பான நோய்களும் நீங்கும்.

கருஞ்சீரகம் கபம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். தாவரங்களிலேயே நோய் எதிர்ப்புசக்தியை கொண்டிருக்கும் உணவு பொருள் கருஞ்சீரகம் தான்.

கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. இவை பக்கவிளைவை உண்டாக்கவும் செய்யாது.

Read Previous

உடல் எடை குறைய, முதுகுவலி நீங்க, மூட்டு வலி நீங்க..இதை குடித்தாலே போதும்..!!

Read Next

இரவில் கால் ரொம்ப எரியுதா?.. அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular