நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 75 வயதான சம்பூர்ணம் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரிடம் இருந்த சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மகன் சுப்பிரமணியையும் குற்றவாளிகள் மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




