Oplus_131072
மூலநோய் முற்றிலும் குணமாக:
இன்றைய கால சூழலில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மூலநோய் வருகிறது….உடற்சூடு,ஒழுங்கற்ற உணவு பழக்கம்,மலச்சிக்கல்,மலக்குடல் பகுதியில் ஏற்படும் தொற்று போன்றவற்றால் மூலநோய் வருகிறது….12வகை மூலநோய் உண்டு…அதனில் இரத்தமூலம் ஏற்பட்டால் முக்கியமாக கவனிக்க வேண்டும்…
மலத்தோடு சேர்ந்து இரத்தம் வெளியேறி கொண்டே இருக்கும்.உடல் மிகவும் பலகீனம் அடையும்.
நாட்டு வாழைபழத்தை தோலோடு நீள்வாக்கில் வெட்டி நல்ல விளைந்த சீரகத்தை தூவி மறுபடி அதை மூடி ஒருதுணியால் சுற்றி இரவில் வைத்துவிட வேண்டும்.மறுநாள் காலை வெறும் வயிற்றில் அதனை உண்ண வேண்டும்.தொடர்ந்து செய்துவர இரத்த மூலம் குணமாகும்.
வேறுமூலமாக இருந்தால் துத்தி இலை 7 ஒருபல் பூண்டு இதை அரைத்து நீரில் கலக்கி குடித்துவர குணமாகும்.




