மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு 80 சதவீதம் பயன் கிடைக்கும் என்று கர்நாடக முதல்வர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மேகதாது அணை விவகாரம் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமை மற்றும் நீர்வள நலன் சார்ந்த முக்கிய பிரச்சினை என்பதால், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, அணை கட்டும் திட்டத்தைத் தடுக்க தேவையான அழுத்தத்தை அளிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.




