மேம்பாலத்தில் செல்ஃபி எடுத்த பெண்ணிடம் தகராறு: 3 பேர் கைது!

 

 

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் வீடு திரும்பியுள்ளார்.

 

டான்சி நகர் மேம்பாலத்தில் அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

“எங்களை பார்த்து ஏன் ஆபாச சைகை செய்தாய்?” எனக் கேட்டு, கணவர் முன்னிலையில் பெண்ணை தாக்கிவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இதுகுறித்த புகாரின் பேரில் தீபக் ராஜா (19), விக்னேஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

Read Next

கார் பந்தயத்தில் விபத்து: நடிகர் அஜித் காயமின்றி தப்பினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular