மைசூருவில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, இரு மகள்களை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் கடன் சுமை காரணமாக தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டம் ஹுன்சூர் நகரைச் சேர்ந்த 42 வயதான ஹரிஷ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நிஷ்சிதா (34), மகள்கள் நிக்‌ஷா (12), ரக்‌ஷா (8) ஆகியோருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று, ஹரிஷ் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற போலீசார், நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதிகரித்த கடன் சுமை காரணமாக ஹரிஷ் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது வயதான தாயாரை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசாரின் தகவலின்படி, மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த பின்னர், ஹரிஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் சொத்து ஆவணங்கள் மற்றும் அவற்றை ஒப்படைக்க வேண்டிய விவரங்கள் குறித்து குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஹரிஷின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு கடன் சுமை இருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான முழுமையான காரணம் குறித்து மைசூரு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

இந்திய அணியில் காயம் அதிகரிப்பு: 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல்தகுதி சிக்கலில்..!!

Read Next

பஞ்சாப்பில் ஆணவக்கொலை: காதல் திருமணம் செய்த இளம்பெண் படுகொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular