மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி..??

Oplus_131072

மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி…..

தேவையான பொருட்கள்:

மொச்சை-1/2 கோப்பை கத்திரிக்காய் பிஞ்சாக-5
பூண்டு-7 பல்
சின்ன வெங்காயம்- 9
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1
உப்பு-1 1/2 தே.க
மஞ்சள் தூள்-1/4
புளிச்சாறு -2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி-2 1/2 தேக்கரண்டி
அல்லது
தனி மிளகாய்த்தூள் -1 1/2, மல்லித்தூள்-1 தேக்கரண்டி
தளிக்க :
எண்ணெய் -1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு-1 தே.க
சீரகம்-1/2 தே.க
வெந்தயம்-1/4 தே.க
செய்முறை:
மொச்சையை 6 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் 2 விசில் வேக வைத்துக்கொள்ளவேண்டும்.

கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம் பூண்டு தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
கறிவேப்பிலை,வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர் புளிச்சாறு , மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் செர்த்துக்கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.

Read Previous

மனைவியின் அருமை..!! அற்புதமான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்த பதிவு..!!

Read Next

இந்தப் பதிவை ‌ படிக்கும் அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular