Oplus_131072
மொச்சை கெட்டி பருப்பு செய்வது எப்படி ….
தேவையானவை:
காய்ந்த மொச்சை – 200 கிராம்
தோலுரித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – ஒன்று
சாம்பார் பொடி – தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 6 பல் (தட்டவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
காய்ந்த மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை மொச்சையின் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் பருப்பைத் தனியாக எடுக்கவும். குக்கரில் மொச்சையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து ஒன்றிரண்டாகக் கடையவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மொச்சை, உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து மொச்சைக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
இதைச் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்…




