மொத்த மளிகை வியாபார கடையில் சோதனை..!! ரூ.19 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல்..!!

மொத்த மளிகை வியாபார கடையில் சோதனை..!! ரூ.19 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல்..!!

சேலம் செவ்வாய்பேட்டையில் பிரபல சிகரெட் நிறுவனங்களின் பெயரில் போலியாக சிகரெட் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஒரு மொத்த மளிகை வியாபார கடையில் சோதனை நடத்தினர்.
அங்கு போலியாக தயாரிக்கப்பட்ட சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.19 லட்சம் மதிப்பிலான 527 சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளரான ராஜஸ்தானைச் சேர்ந்த சித்ராராம் (41) கைது செய்யப்பட்டார்.

Read Previous

மொச்சை கொட்டையில் கொட்டி கிடக்கும் நன்மைகள்..!! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மனதில் நிறுத்த வேண்டிய வரிகள்..!! அனைவரும் கட்டாயம் இந்த பதிவை படித்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular