ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று (செப்.5) அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “எம்ஜிஆர் எனும் மகத்தான தலைவரால் உருவாக்கப்பட்டது அதிமுக. 1975ல் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக எம்ஜிஆர் நியமித்தார். கட்சியில் இருந்து ஒருவர் வெளியேற நினைத்தால், அவரது வீட்டிற்கே சென்று பிரச்னைகளை கேட்டு, மக்களுக்காக நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என இணைத்துக் கொள்வார்” என்றார்.




