ரஜினி கமல் விஜய்க்கு பிறகு அமரன் மூலம் வரலாறு படைத்த சிவகார்த்திகேயன்…!!

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி உருவாகிய அமரன் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் முகுந்தனின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவையும் நடித்துள்ளார், அமரன் படம் ரூபாய் 250 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் ரஜினிகாந்த் கமலஹாசன் மற்றும் விஜய்க்கு பிறகு ரூபாய் 250 கோடிக்கு மேல் வசூல் செய்த படத்தை கொடுத்தது நான்காவது தமிழ் நடிகர் என்று வரலாறை சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார், பல நட்சத்திரங்கள் நடித்திருந்த பொன்னியின் செல்வன் இந்த சாதனையை படைத்திருந்தாலும் சிவகார்த்திகேயன் தனி ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இதனை செய்துள்ளதால் நான்காவது நடிகராக கருதப்படுகிறார், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் விரைவில் 300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் அதிகாரிகள் என பலரும் சிவகார்த்திகேயன் அவர்களின் அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர்..!!

Read Previous

காதலனுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த நண்பர்கள்..!!

Read Next

பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல புதிய அமைதிக்காகவும் பிறக்கலாம் நடிகர் பார்த்திபன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular