ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Oplus_131072

ரணகள்ளி மூலிகை
ரணகள்ளி இலையை நறுக்கி நட்டு வைத்தால் வளர்ந்துவரும் குணமுடையது.
ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், #சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.
#காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும். ரணகள்ளி மூலிகை இலைகளை நன்றாக மைய அரைத்து வெற்றிலையோடு சேர்த்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, #காயம் விரைவில் குணமடையும்.
ரணகள்ளி மூலிகையின் இலைகள் #சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும் ஏழே நாட்களில் குணப்படுத்தும். மூலிகையின் இலையுடன் 4, 5 மிளகு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இலையின் அளவை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்து ஏழு நாட்களும் ரணகள்ளி இலையை சாப்பிடலாம்.
#சரும_பிரச்சனைகள் மற்றும் மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் குணமாக இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.
மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் #கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி,, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும். இரணக் கள்ளி செடியை வீட்டில் கட்டிவிட #கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.
இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர #குன்மநோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சியாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். #பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.
#ரணகள்ளி மூலிகையின் இலைகளை மருந்தாக எடுத்துக்கொள்ளும் தினங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி மீன், முட்டை போன்ற உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

Read Previous

சங்க இலக்கிய மக்களின் உணவும், வாழ்க்கை முறையும்..!!

Read Next

பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular