Oplus_131072
இரத்தத்துல ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஆட்டு சுவரொட்டியை தேடி அலைவதற்கு பதில் இந்த பசலை கீரையை வாங்கி சாப்டுங்க.. பசலைக்கீரை சாப்பிடுவதால் உடலில் ரத்தம் அதிகரிக்கும். அசைவம் சாப்பிடாத நபர்கள் இந்த கீரையை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்த அளவை அதிகரிக்க முடியும். அதுமட்டுமின்றி இந்தக் கீரை வீட்டில் வளர்த்தால் நன்றாக வளர்ந்து நமக்கு நன்மை பயக்கும்.
இடம் இருக்குறவங்க ஒரு துணுக்கு கீரையை உடைச்சி மண்ணுல நட்டாலே போதும் நல்லா தழைத்து வளரும் …
அதிக இரும்பு சத்து இருக்குற ஒரு கீரை இது.
பருப்பு சேர்த்து கூட்டு செய்து சப்பாத்தி, சாதம் இவற்றோடு சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.




