ரயில் நிலையங்களில் சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே போலீசார், பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிக்கவுள்ளனர்.




