ரவா லட்டு செய்வது எப்படி..
குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் அனைவருக்குமே இந்த ரவா லட்டு மீது ஒரு ஆர்வம் உண்டு. ரவா லட்டு செய்வது அவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க. ஆனா பலரும் ஐயோ இவ்வளவு பெரிய விஷயமா இத நம்ம எப்படி செய்யறது அப்படின்னு கடையிலும் பேக்கரிலையும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம். ஆனா அதை சுத்தமா ஆரோக்கியமான முறையில சுவையுடன் எப்படி வீட்டிலேயே செய்யறதுன்னு இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை – 3/4 கிலோ
சர்க்கரை – 1/2 கிலோ
முந்திரி – 10
ஏலக்காய் – 5 (பொடி செய்தது)
பால் – 1/4 லிட்டர்
நெய் – 50 கிராம்
திராட்சை – 10
செய்முறை:
ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும்.பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்.




