ராமநாதபுரம், பேராவூர் பகுதியில் இன்று (அக்., 03) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், ரூ.738 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த விழாவில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.




