எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது…
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 12 பேர் சிறை பிடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுடன் பருத்தித் துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர், அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர், மேலும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர் தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர், இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று விசை படகுகளுடன் 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர், தொடர்ச்சியாக இலங்கை கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, மேலும் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்வது அச்சமான நிலையை தருவதாகவும் இதனால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் சங்கம் கோரி உள்ளது..!!




