ருத்ராட்சம் அணிகிறீர்களா..?? இந்த காரியங்களை தவறி கூட செய்து விடாதீர்கள்..ஆபத்து உங்களுக்குத்தான்…!!

Oplus_131072

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி அணியும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அதை சரியாக அணிந்துகொள்வது உங்களுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது உங்களுக்கு தீங்கானது என்றும் கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் ருத்ராட்சம் அணிவது சிவபெருமானுடன் தொடர்புடையது என்பதால் அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதை அணிவது உங்கள் மனம் மற்றும் உடலின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது என்று நம்பப்படுகிறது.

எனினும், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி அணியும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அதை சரியாக அணிந்துகொள்வது உங்களுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது உங்களுக்கு தீங்கானது என்றும் கூறப்படுகிறது.

ருத்ராட்சையை பொறுத்தவரை, இயற்கையான ஆண்டிபயாடிக் தன்மை வாய்ந்தது. இதனால், நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. அத்துடன், இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய சக்தியையும் பெற்றிருக்கிறது.

எனவே, நம்முடைய உடலுடன் இந்த ருத்ராட்சை ஒட்டியிருக்கும்போது, நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும். இதன்காரணமாக, மனதில் ஒருவித தெளிவும், நிம்மதி உணர்வும், ஆத்ம திருப்தியும் கிடைக்கின்றது… அதைவிட முக்கியமாக, பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற அபாய நோய்களின் வீரியத்தை இந்த ருத்ராட்சைகள் குறைக்கின்றன.

பலருக்கும் ருத்ராட்சை அணிவதில் பல சந்தேகங்கள் இருக்கும். பெண்கள் அணியலாமா, மாதவிடாய் நாட்களில் அணியலாமா, இல்லறத்தில் ஈடுபடும் போது அணியலாமா போன்ற கேள்விகள் இருக்கும். இவை மூன்றுமே இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வு என்பதால் அந்த நேரங்களில் ருத்ராட்சை அணிவதில் தப்பில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 5 முகம் அணிந்தவர்களுக்கு எந்த கணக்கும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த ருத்ராட்சையை நீங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய கயிற்றில் அணியலாம். வேண்டுமென்றல் தங்கம், வெள்ளியில் கூட அணியலாம். ஆனால் கருப்பு கயிற்றில் மட்டும் அணியக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது. ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஞாபக சக்தியும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது ருத்ராட்சம் அணியக்கூடாது?: இறந்த வீடு அதாவது துக்கம் நிகழ்ந்த வீட்டிற்கோ, தகனம் செய்யும் இடத்திற்கோ செல்லும் போது ருத்ராட்சை அணியக்கூடாது. தேபோல, படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது. ஒவ்வொரு இரவும் தூங்கும் முன்பும், ருத்ராட்சை மாலையை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுப்பது நல்லது.

இதனால் மனம் அமைதி பெறுவதுடன், நல்ல தூக்கமும் வரும். பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது. இதனால் வாழ்க்கையில் தொல்லை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

த்ராட்சம் அணியும்போது மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, இறைச்சி சாப்பிடக்கூடாது என சொல்லப்படுகிறது. இதை மீறினால் ருத்ராட்சை தூய்மையற்றதாகிவிடுமாம். மேலும் உங்களுக்கு வரக்கூடிய நன்மையும் வராமல் போய்விடும். அதனால் இந்த மாதிரி சமயங்களில் கழற்றி வைத்துவிடுவது நல்லது.

Read Previous

ஒரு கிட்னியுடன் ஒரு நபர் எத்தனை ஆண்டுகள் வாழ முடியும்..?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!

Read Next

அடிக்கடி கண் துடிக்கிறதா..?? காரணம் என்ன..?? ஜோதிடம் சொல்வது இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular