ஈரோடு மாவட்டம் பவானியில், பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியதர்ஷினிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், குடும்பக் கஷ்டத்தைக் காரணம் காட்டி குழந்தையின் பாட்டி தங்கமணி (47), குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அது கொலை என உறுதியானதைத் தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்கமணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




