ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின் என்ற பெண், பல ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குலுக்கலில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி) மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றதாக தெரியவந்தது.

வெற்றி பெற்ற தகவலை அறிந்த அவர், லாட்டரி சீட்டை தனது தாயிடம் கொடுத்து சரிபார்க்கச் செய்தார். ஆனால், சீட்டை ஸ்கேன் செய்தபோது வெற்றி பெற்றதைக் குறிக்கும் எச்சரிக்கை ஒலி அல்லது தகவல் வராததால், அந்த சீட்டுக்கு பரிசு கிடைக்கவில்லை என்று தவறாக நினைத்தனர்.

இதனால், அந்த லாட்டரி சீட்டு கவனக்குறைவால் லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், வெற்றி பெற்ற எண்கள் வெளியானபோது தாங்கள் வாங்கிய சீட்டே ஜாக்பாட் வென்றது என்பது தெரியவந்ததை அடுத்து, கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தை தொடர்புகொண்டு விவரங்களை தெரிவித்தார். இருப்பினும், அசல் லாட்டரி சீட்டு தற்போது இல்லாததால் பரிசுத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லாட்டரி நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும், விதிமுறைகளின்படி தேவையான ஆய்வுகள் முடிவடைந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரூ.153 கோடி பரிசை வென்றும் அதை பெற முடியுமா என்ற எதிர்பார்ப்பில் கீத் மெயின் காத்திருக்கிறார்.

Read Previous

மனைவியின் அதிர்ஷ்டத்தால் செல்வம் சேரும் ஆண் ராசிகள்.. ஜோதிடம் என்ன சொல்கிறது?..

Read Next

நீல நிற சேலையில் மிளிரும் சிம்ரன்.. 49 வயதிலும் ரசிகர்களை கவரும் புதிய புகைப்படங்கள் வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular