நீல நிற சேலையில் மிளிரும் சிம்ரன்.. 49 வயதிலும் ரசிகர்களை கவரும் புதிய புகைப்படங்கள் வைரல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், 49 வயதிலும் தனது அழகும், இளமையான தோற்றமும் மூலம் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தமிழில் VIP திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சிம்ரன், நேருக்கு நேர், வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

2003-ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்ட சிம்ரன், திருமணத்திற்குப் பிறகும் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகி மட்டுமல்லாமல், குணச்சித்திர மற்றும் வலுவான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் அவர், நீல நிற சேலையில் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எளிமையான தோற்றம், நேர்த்தியான உடைத் தேர்வு மற்றும் புன்னகையுடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, லைக்குகள் மற்றும் பாராட்டுகளை குவித்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by SIMRAN (@actorsimranofficial)

Read Previous

ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..

Read Next

பலமுறை முயன்று நண்டை வேட்டையாடிய பறவை.. வைரலாகும் அசத்தல் காட்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular