சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில், சுமார் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் ‘மெட்ரோஸ் பூங்கா’ மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.23) திறந்து வைத்தார். மொத்தம் 3,750 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், 3 பூப்பந்து விளையாட்டு அரங்குகள், 2 பிக்கிள் மைதானங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதிகள் இடம்பெற்றுள்ளன.




