இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில்..
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3,308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே வியாழக்கிழமை கடைசி நாளாகும், இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் இதில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியும் கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டுள்ளது, நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், மேலும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ள இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர், மேலும் விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூபாய் 150 மற்றும் கட்டுணர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 செலுத்த வேண்டும் எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது, இன்றே கடைசி நாள் என்பதனால் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது..!!




