சென்னையில் வாட்ஸ் ஆப் குழுவில் வந்த தகவலை பார்த்து கணவர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சென்னை, குன்றத்தூரில் பிரசவ வலியில் இருந்த தனது மனைவிக்கு கணவர் (மனோகரன்) வாட்ஸ் ஆப் குழுவில் வந்த தகவலை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்ததில் அவர்கள் செல்போனில் ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்’ என்ற வாட்ஸ் ஆப் குழு இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த குழுவை பார்த்து தான் மனோகரன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த குழுவில் மொத்தம் 1024 நபர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமபவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




