வாத்துக்கறி கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு சமைத்துப் பாருங்கள் சுவையோ சுவை..!!

வாத்துக்கறி கிரேவி செய்வதற்கான தேவையான பொருட்கள் வாத்து கறி அரை கிலோ, தக்காளி இரண்டு, பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 4, இஞ்சி பூண்டு விழுது நாலு ஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், சோம்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவைக்கேற்ப, மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, பட்டை இரண்டு, கிராம் 2, மிளகு 5, சீரகம் 1/4 ஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும், செய்முறை வார்த்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும், வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ள வேண்டும், மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும், மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும், குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும், பிறகு கொத்தமல்லி தழை தூவி கிளறிவிட்டு வாத்து கறியை போட்டு பிரட்டி விடவும், அதன் பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும், பிறகு குக்கரை மூடி போட்டு எட்டு நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும் இப்பொழுது சுவையான வாத்து தரு கிரேவி ரெடி..!!

Read Previous

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் : அதனை சமைத்தும் பார்ப்போம்..!!

Read Next

முட்டை குழம்பின் சுவையறிந்து சமைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular