இன்றைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
வங்கக்கடல் பகுதியில் புயல் (டானா) உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி
உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழை வரும் அக்டோபர் 27ம் தேதி வரையிலும் நீட்டிக்கலாம் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது




