வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்..!!

வாய் துர்நாற்றம் என்பது நாம் இரவில் தூங்கி காலையில் எழும்போது அனைவருக்கும் ஏற்படும். பின்பு, பிரஸ் செய்த பிறகு அந்த துர்நாற்றம் காணாமல் போய்விடும். இதற்கு பித்த தோஷம் என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். பித்தத்தின் இந்த இயற்கையான மேல்நோக்கிச் செல்லும் குணத்தை கீழ் நோக்கிச் செல்லத்தினால் மலம் வழியாக வெளியேறி பித்தம் குறைந்து வாய் துர்நாற்றம் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கு ஆயுர்வேத மருந்துகள் பல இருக்கின்றன இதில் திரிபலா சூரணத்தில் அடங்கியுள்ள கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் சூரணத்தை சுமார் 200 மில்லி தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து கொதிக்க வைத்து நூறு மில்லியாக வட்டச் செய்து வடிகட்டி இரவில் தூங்குவதற்கு முன்பு இன்று தண்ணீரை பயன்படுத்தி கொப்பளித்து சிறிதழைவு குடித்தால் மறுநாள் காலையில் ஏற்படும் மலக்கழிவில் இந்த பித்த தோஷம் வெளியேறிவிடும். மேலும், புளிப்பு வகையான புளித்த இட்லி மாவு மற்றும் தோசை போன்ற உணவுகளை இரவில் உட்கொள்வதால் அந்த மாவில் உள்ள புளிப்பு தன்மையால் பித்தம் ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது. இதனால் இரவில் நாம் உட்கொள்ளும் உணவில் இட்லி தோசையை தவிர்த்து அதற்கு பதிலாக கோதுமை ரவை போன்றவற்றை நாம் உட்கொண்டால் இந்த பித்தத்தை தடுக்கலாம். மேலும் துவப்பு மற்றும் கசப்பு வகை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பித்தம் என்பது கட்டுப்பட்டு வாய் துர்நாற்றம் ஏற்படாது. மேலும் இரவில் உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் வாக்கிங் செய்ய வேண்டும் குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரமாவது வாக்கிங் செய்ய வேண்டும் மேலும், இரவிலும் தூங்குவதற்கு முன்பாக பல் துலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாய் துர்நாற்றத்தை நாம் தவிர்க்கலாம்.

Read Previous

காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!

Read Next

இட்லி தோசை முதல் சப்பாத்தி பூரி வரை அனைத்துக்கும் பொருந்தக்கூடிய இந்த குருமாவை செய்ய 10 நிமிடமே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular