வாழும் போதே சுவர்க்கம் தாய் வீடு..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

🏘️பிறந்த வீடு🏘️

 

விடுமுறை நாட்கள் வருவதென்றால் பிள்ளைகளை விட அதிக மனமகிழ்வது பெண்கள் தான்.

ஏனெனில் அச்சமயத்தில் தானே

பிறந்த வீட்டுக்கு செல்லலாம்.

திருமணமான பெண்கள் விருப்பத்துடன்

செல்ல விரும்புவது

ஊட்டியோ கொடைக்கானலோ இல்லை

தன் பிறந்த வீடு.

அதை விடவா ஒரு சிறந்த

ஓய்விடம் அவளுக்கு கிடைத்திட போகிறது.

 

புகுந்த வீட்டினில்

காலையில் சீக்கிரம் எழுந்து

காபி கொடுத்து

காலை டிபன் செய்து

அது கூட

மதியமும் சேர்த்து லஞ்ச் செய்து

குழந்தைகளை குளிப்பாட்டி

எட்டு மணிக்கெல்லாம்

அவர்களை ஸ்கூல் வேனில் ஏத்தி

அவருக்கும் கொடுக்க வேண்டியதை

எல்லாம் தந்து

“அப்பாடா” என்று தரையில் படுத்து

கொஞ்சம் உருண்டு

மிஞ்சிய டிபனை இருக்கிறதை

வாயில போட்டு

சமைச்ச பாத்திரங்கள் கழுவி

ஊறவைத்த துணிகளை துவைத்து

வீடு மொத்தமாய்‌ பெருக்கி,

மதியம் சாப்பிட

ஒருத்திக்கு எதுக்கு சமையல்னு

இருக்கிறதை அள்ளி போட்டு

சாப்பிட்டு..

தனியாய் தனியாய் விதும்பி..

 

தனியாய் வெறுப்பாய்

பேச கூட ஆள் இல்லாமல்

டிவியும் ஃபோனும்

புத்தகமும்

மாறி மாறி மேய்ந்து விட்டு

காய்ந்த துணிகளை கொண்டுவந்து

ஸ்கூல் விட்டு வந்த குழந்தைகளுக்கு

குடிக்க காம்பளான் கொடுத்துவிட்டு

பாடத்தை வரவழைக்க வாய்வலிக்க சொல்லித்தந்து,

இடையில் இட்லிக்கு ஊறப்போட்டு,

நைட்டு டிபன் என்ன செய்யறதுன்னு

இடையில பிளான் எல்லாம் போட்டு

தூங்க போறதுக்குள்ள ஒரு யுகமே

முடியற மாதிரி இருக்கும்

 

ஆனா இதுவே இங்க அம்மா வீட்டில்

காலை எவ்வளவு நேரமும் தூங்கலாம்

சமைக்க வேண்டாம்

பாத்திரம் கழுவ வேண்டாம்

கீரைகளை ஆய வேண்டாம்

சீக்கிரம் சாப்பிடலாம்

சாப்பிடும் போதும் டிவி பார்க்கலாம்

அக்கம் பக்கம் கதை பேசலாம்

அப்பா கூட வம்பு இழுக்கலாம்

அம்மாவை கொஞ்சலாம்

இருக்கிற அந்த ஒரு வாரமும்

சுவர்க்கமாய் போகும் பெண்களுக்கு

இது எல்லாம்

கணவன் வீட்டிலும் கிடைக்கும்

ஆனா ஒரு படி மேல்

பிறந்த வீட்டில் தான் அந்த நிம்மதி கலந்த சந்தோஷம் கிடைக்கும்

திருமணம் முன்பு இருந்த சுதந்திரம்

கிடைத்த மாதிரி ஒரு ஃபீல்.

இது கணவர் எவ்வளவு கொட்டி

கொடுத்தாலும் கிடைக்காது.

வாழும் போதே சுவர்க்கம்

தாய் வீடு ..!

Read Previous

சுடு தண்ணீர் மற்றும் ஐஸ் வாட்டர் ஆகியவற்றின் பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

பெற்றோரை மனம் நோக செய்யாதீர்கள்..!! உண்மை பதிவு..!! படித்ததில் மிகவும் வலித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular