தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 30) வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, 120 மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 120 பேருந்துகளில் 3 பெண்கள் ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று ஓட்டுநர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எங்களைப்போல பல பெண்கள் வேலைக்கு சேர வேண்டும் எனவும் ஓட்டுனராக தேர்வானவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




