முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் விரல் நுனியில் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அவரை யாரும் வழிநடத்த தேவையில்லை என்றும் திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இருப்பினும், நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள சாலைப் பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்த தெளிவான விவரங்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதற்காக ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் எ.வ.வேலு வலியுறுத்தினார்.
மேலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெறுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.




