அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அவரிடம், ‘விஜய்யுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், “2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியதற்காக அவருடன் கூட்டணி என கேட்கலாமா?. கூட்டணி குறித்து டிசம்பரில் தான் முடிவு அறிவிப்பேன்” என்றார். மேலும், “பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல, நிதானமாக எடுத்த முடிவு” என்றார்.




