சென்னையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்தார். “ஆட்சி போய்விட்டதால் இனி கமிஷன் மற்றும் பணம் குவிக்கும் வாய்ப்பு இல்லை என்பதையே சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், முதலமைச்சர் விஜயின் ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் நடந்தாலும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும், தவெகவுக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அதைத் தடுக்கும் ‘போர்வாளாக’ இருப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக பகல் கனவு காண வேண்டாம். ஆயிரம் தாக்குதல்களையும் தாங்கும் மனவலிமை எனக்கு உள்ளது” என்று ஆவேசமாக கூறினார். வைகோவின் இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



