நடிகை மாளவிகா மோகனன், இண்டிகோ விமான சேவையில் அடிக்கடி ஏற்படும் தாமதம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். உங்கள் 10 விமானங்களில் 9 விமானங்கள் ஏன் எப்போதும் தாமதமாகின்றன? பயணிகளை விமானத்தில் ஏற்றி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமர வைக்கும் புதிய டிரெண்டை உருவாக்குகிறீர்கள். தாமதம் ஏற்பட்டால், பயணிகளை விமானத்தில் ஏற்றும் வேலையையும் தாமதமாக செய்யலாமே என்று கேள்வியெழுப்பினார்.




