எந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. விளக்கை சுத்தம் செய்வதில் கூட பல முறைகள் உள்ளன. அதாவது எந்த கிழமையில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விளக்கு இந்த கிழமைகளில் கண்டிப்பாக ஏற்ற வேண்டும் என்று தெரிந்தால் நமக்கு எந்த கிழமைகளில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர மற்ற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம் முதல் நாள் விளக்கேற்றி விட்டு அடுத்த நாள் அதே திரியில் நுனியில் கருகி இருக்கும் அதை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் அதே திரியை பயன்படுத்தி விளக்கேற்றலாம் புது திரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. திரியை வெறும் கைகளால் தூண்டக்கூடாது ஏதாவது தீக்குச்சி அல்லது பூவின் காம்பு ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்ட வேண்டும். கண்டிப்பாக இதை அனைத்தையும் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.




