Oplus_131072
கூர்மையான பார்வையுடன் சுற்றும் கவனித்தபடியே சாப்பிடும்.
சிறிய சப்தத்தைக் கூட அத்தனை கூர்மையாக கவனித்துவிடும். காற்றில் ஏற்படும் அதிர்வுகளைக் கூட அத்தனை எளிமையாக பறவைகளால் உணர முடியும்.
யாரேனும் பத்து(10) மீட்டர் இடைவெளியில் அசைந்தாலும் கூட பறவைகளால் துள்ளியமாக கண்டுபிடிக்க முடியும்.
பறவைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட புலன்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்துகிறது. அந்த முழுமைக்குப் பெயரே விழிப்புணர்வு.
பறவைகளின் இந்த விழிப்புணர்வு தான் அவைகளுக்கு உள்ளுணர்வைக் கொடுக்கிறது.
உள்ளுணர்வின் காரணமாகவே இயற்கையின் மாற்றங்களை துள்ளியமாக பறவைகளால் உணர முடிகிறது.
எங்கே மழைநீர் தேங்கி உள்ளதோ அந்த இடத்தை மிகச் சரியாக உணர்ந்து அங்கு செல்கிறது. எந்தே நேரத்தில் எங்கே தனக்கு என்ன உணவு கிடைக்கும் என்பதையும் பறவைகளால் உணர முடிகிறது.
அதுமட்டுமல்ல இயற்க்கையின் சீற்றங்களையும் முன்னரே உணர பறவைகளால் முடியும்.
ஒவ்வொரு செயலையும் விழிப்புடன் செய்யுங்கள். ஒவ்வொரு புலனையும் விழிப்புடன் பயன்படுத்துங்கள்.
விழிப்புணர்வு மட்டுமே வாழ்க்கையை உணர வைக்கும். நம் சக்திகளை உணர வைக்கும். நம் பிறவிப் பயனை உணர வைக்கும்.




