தொடர் கனமழையால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நெல், பருப்பு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




