விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் ஆட்சியர் தகவல்…!!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தெரிவித்துள்ளார்…

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை பயிரில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் சிறந்து விளங்குகிற விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023 மட்டும் 2024 ஆம் ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதலுடன் ஊக்குவிக்கும் வகையில் பணத்தொகையும் வழங்கப்பட உள்ளது, இதில் முதல் பரிசு 1 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசு 60 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசும் 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது, மேலும் விவசாயிகள் இந்த தகவலை பயன்படுத்தி சிறந்த விவசாயிக்கான சான்றிதழ் மற்றும் பரிசினை வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் தகவலை பெற்று அதற்கான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து கொள்ளலாம்..!!

Read Previous

படித்ததில் பிடித்தது: நிதானமாக இரு..!! உன்னால் எதையும் சாதிக்க முடியும்..!!

Read Next

லட்சம் பேர் வந்தாலும் பயப்பட மாட்டேன் : குமாரசாமி அதிரடி பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular