வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுவையான இட்லி பொடி செய்வது எப்படி..?? முழு விளக்கம் உள்ளே..!!

Oplus_131072

வீட்டிலேயே இட்லி பொடி செய்வது எப்படி?
இட்லி பொடி செய்யத் . தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு, 2 பங்கு, கடலைப்பருப்பு ஒரு பங்கு, காய்ந்த மிளகாய் தேவைக் கேற்ப, பெருங்காயம் ஒரு துண்டு , கொஞ்சம் கருவேப்பிலை., 2 ஸ்பூன் எண்ணெய். தேவையான உப்பு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். இதை வறுக்கும் போதே உடன் பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து, இறக்குமுன் கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

பின், கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும்.

இப்போது வறுத்த அனைத்தையும் ஆறவிட்டு தேவையான உப்பு சேர்த்து உலர் மிக்சி ஜாரில் பொடி செய்து கொள்ளவும்.

பொடியை சிறிது நேரம் ஆறவிட்டு பாட்டிலில் எடுத்து வைத்தால் இரு மாதமானாலும் நன்றாக இருக்கும்.

பருப்புப் பொடி சாதம்:

சுட சாதத்தில் பொடி போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

பொடி தோசை:

தோசை சுடும் போது நெய்யோடு மேலே தூவினால் பொடி தோசை.

பொடி இட்லி:

இட்லியை துண்டுகளாக வெட்டி பொடியில் பிரட்டி, சிறிது எண்ணெய் விட்டு வாணலில் மிதமான தீயில் வறுத்தெடுத்தால் பொடி இட்லி.

தனியாக இட்லிக்கு பொடி வைக்கும் போது பூண்டு பற்கள் நசுக்கி சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு கலந்து , தொட்டு சாப்பிடலாம்.

 

Read Previous

கடவுளை ஏமாத்த முடியாது..!! ஆர்த்தி ரவி மறைமுக அட்டாக்..!!

Read Next

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 976 ஜூனியர் நிர்வாகி காலியிடங்கள்..!! கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular