வீட்டில் உள்ள தோஷம் விலக செய்யவேண்டிய எளிய பரிகாரம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீடு என்பது ஒரு மனிதன் உருவாகும் இடம்.வீடு இருக்கும் சூழலில் தான் ஒரு மனிதனின் மனநிலை மாறுபடுகிறது.அதாவது வீட்டில் யாராவது மனவருத்தம் கொண்டு இருந்து அதை நம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் அந்த உணர்ச்சியை நம்மால் உணரமுடியும்.அதை தான் எண்ண அதிர்வலைகள் என்கின்றோம்.

அதே வீட்டில் எதாவது எதிர்மறையாக நடக்க போகிறது என்றாலும் நம்மால் அதை உணரமுடியும்.அப்படியாக நாம் ஆசையாக வாழ சென்ற வீட்டில் சமயங்களில் வாஸ்து பார்ப்பது இல்லை.அப்படி பாத்திருந்தாலும் அவசரத்தில் ஒரு நல்ல வாஸ்து நிபுணர் கொண்டு பார்த்திருக்க மாட்டோம்.

அப்படி வாஸ்து சரி இல்லை என்றாலும் நம்மால் உணர முடியும்.ஒரு வீட்டில் வாஸ்து சரி இல்லாமல் போக தேவை இல்லாத மனக்குழப்பம் கஷ்டம் நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.அப்படியானவர்கள் பயப்படாமல் அந்த தோஷத்தை கழிக்க வீட்டிலேயே ஒரு சில எளிய பரிகாரங்களை பார்க்கமுடியும்.அதை பற்றி பார்ப்போம்.

அப்படி வீட்டில் ஏதேனும் தோஷம் இருக்கிறது என்று உணர்ந்தால் வீட்டுத்தலைவாசல் நிலையின் நீளத்தை அளந்து கொண்டு அந்த அளவிற்கு அருகம்புல் மாலையை நிலையில் மாட்ட வேண்டும். அதே போல மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்க வெற்றிலைமாலை சூட்டுங்கள்.

நிலையில் சூட்டப்பட்ட அருகம்புல் மாலையையும் மகாலெட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் எடுத்து அருகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள்வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்து விட வேண்டும்.

இதை வீட்டின் வீட்டின் வெளிப்புறத்திலும் தெளிக்கலாம். பிறகு அருகம்புல் மாலையையும் வெற்றிலை மாலையும் ஒரு வெள்ளை துணியில் முடித்து ஆற்றில் போட்டுவிட வாஸ்து தோஷம்விலகிவிடும்.

ஆக வீட்டில் தொடர்ந்து கஷ்டம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்று கலங்காமல் இந்த எளிய பரிகாரத்தை செய்ய வீட்டில் உள்ள தோஷம் விலகி சந்தோசம் நிலைக்கும்.

Read Previous

வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை விரட்ட இந்த ஒரு பொருள் போதும்..!!

Read Next

ஹனிமூன் சென்ற டாக்டர் தம்பதி பலி..!! ரூ.1.60 கோடி அபராதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular