வீட்டில் தனியாக இருந்த மாணவி தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!
திருத்தணியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் மகள் கலைச்செல்வி தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்றாம் ஆண்டு படித்து வந்தார். மணிகண்டன் தனது குடும்பத்துடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று (அக். 4) கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வி தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் விபரீத முடிவிற்கு காரணம் தெரியாத சூழலில் போலீசார் விசாரிக்கின்றனர்.




