வீட்டில் மிளகாய் செடியை ஏன் நடக்கூடாது..?? வாஸ்து கூறும் காரணம் என்ன..??

 

நம் அன்றாட வாழ்க்கையில் நமது வீட்டைச் சுற்றி நமக்குத் தேவையான செடி கொடிகளையும் மரங்களையும் வைத்திருப்போம். சிலர் தினமும் சமையலுக்கு தேவையான காய்கறி செடிகளை வைத்திருப்பர். சிலர் மா மரம், தென்னை மரம் போன்ற தனக்கு தேவையான அனைத்தையும் தன் வீட்டைச் சுற்றி உள்ள காலியிடங்களில் வைத்திருப்பார்கள். அதில் ஒன்றுதான் இந்த மிளகாய் செடி, இந்த மிளகாய் செடியை வீட்டில் நடக்கூடாது. அப்படி இதை வீட்டில் நட்டால் வீட்டில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படும் என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆம் அதைப்பற்றி தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் பல வகையான செடிகள் இருந்தாலும் ஒரு சில செடிகளை வீட்டில் நடக்கக்கூடாது என்று சொல்வார்கள் பெரியோர்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மிளகாய் செடியை நடுவது என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே தவறான புரிதலை அதிகரித்து அவர்களுடைய மன நிம்மதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்து மன அலைச்சலை உண்டாக்குமாம். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி நமது வீட்டில் உள்ள செல்வ செழிப்பை இந்த மிளகாய் செடி நடுவதன் மூலம் நாம் முற்றிலுமாக தவிர்க்கிறோம். இந்த மிளகாய் செடி வீட்டில் நட்டால் செல்வ செழிப்பு என்பது மிகவும் குறைந்து, வீட்டில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள், பண கஷ்டங்கள் போன்றவை வரக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, முட்கள் நிறைந்த அல்லது காரமாக சுவையை தரக்கூடிய தாவரங்கள் வீட்டிற்கு ஆக்கிரமிப்பு ஆற்றலை அதிகமாக வெளியிடுமாம். இந்த ஆக்கிரமிப்பாற்றல் வீட்டில் உள்ள நபர்களுக்கிடையே சண்டையே அதிகரித்து நிம்மதியை கெடுத்து விடும். இதனால் வீடுகளில் மிளகாய்ச் செடி நடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது.

Read Previous

பெற்றோர்களின் கவனத்திற்கு..!! குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா..?? கெட்டதா..??

Read Next

வெள்ளிக்கிழமை மாலை இதை செய்யுங்கள்..!! வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular