வீட்டுக்கு துடைப்பம் எந்த கிழமை வாங்க வேண்டும்..?? எந்த கிழமை வாங்க கூடாது..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
எந்த பொருள் வாங்கினாலும் அதில் ஒரு ஆன்மீக சாஸ்திரம் இருக்கிறது என்பது உண்மைதான். மற்றும் ஒரு சில பொருட்களை எல்லாம் ஒரு சில கிழமைகளில் வாங்க கூடாது என்று நம் முன்னோர்களும் கூறுவார்கள் ஆன்மீக சாஸ்திரத்திலும் அது இருக்கிறது. அந்த வகையில் துடைப்பத்தை எந்த கிழமையில் வாங்க வேண்டும் மற்றும் எந்த கிழமையில் வாங்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீட்டில் உள்ள பழைய தொடப்பம் மிகவும் மோசமான நிலையில் ஆகிவிட்டது என்று நினைக்கும் போது துடைப்பம் வாங்க நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் துடைப்பத்தை வாங்கலாம். இப்படி வாங்குவதன் மூலம் லட்சுமி தேவியின் நல்லாசி நமது வாழ்வில் கிடைத்து நம் வாழ்வு செல்வ செழிப்போடு நிலைத்திருக்கும். அதேபோல் துடைப்பத்தை கண்ட இடத்தில் எல்லாம் வைக்கக்கூடாது. துடைப்பம் கரெக்டான திசையில் வைப்பதன் மூலம் கூட செல்வம் பெருகும். துடைப்பத்தை மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மட்டும் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் எதிர்மறையான ஆற்றல்கள் நீங்கி நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். ஒரு பொழுதும் தொடப்பத்தை வடகிழக்கு மற்றும் கிழக்கு போன்ற திசைகளில் வைத்து விடாதீர்கள்.
தற்போது எந்த நாட்களில் தொடப்பம் வாங்கக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம். திங்கள் கிழமையில் தொடப்பம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மீறி வாங்கினால் பணவரவு குறைந்து கடன் வாங்குவது அதிகரிக்கும். அதேபோல் சனிக்கிழமைகளிலும் துடைப்போம் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கினால் சனி பகவான் கோபம் கொள்வார் என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொண்டு துடப்பம் வாங்குங்கள் மற்றும் தொடப்பத்தை கரெக்டான திசையில் வையுங்கள்.




