வெண்டைக்காய் பொரியலை இப்படி செய்து பாருங்கள்..!! நொடியில் காலியாகும் செய்முறை இதோ..!!

வெண்டைக்காய் பொரியல் என்றால் நம் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். இந்த பொரியலை எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் : 

வெண்டைக்காய் – 1 கப்

மிளகாய் வத்தல் – 2

வறுத்த வேர்கடலை – அரை கப்

சீரகம் – அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

எண்ணெய், கடுகு, உப்பு – தேவையான அளவு

பூண்டு – 4 பல்

வெங்காயம் – அரை

கருவேப்பிலை

மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி – தலா 1/2 ஸ்பூன்

செய்முறை :

வெண்டைக்காயை நீள நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வத்தல் வேர்க்கடலை சீரகம் ஆகியவற்றை பொடியாக ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பச்சை மிளகாய் கடுகு, பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் இந்த வெண்டைக்காயை போடவும்.

வெண்டைக்காய் நன்றாக வதங்கிய பின்பு மிளகாய் பொடி மஞ்சள் பொடி, மல்லி பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

Read Previous

HPCL – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 372 வேலைவாய்ப்புகள்..!! மாதம் ரூ.3,00,000/- வரை ஊதியம்..!!

Read Next

Bharat Petroleum Corporation Ltd (BPCL)-யில் காத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்புகள்..!! ரூ.1,40,000 வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular