வெண்ணெய் புட்டு செய்வது எப்படி..??

Oplus_131072

வெண்ணெய் புட்டு செய்வது எப்படி…

தேவையானவை:

புழுங்கலரிசி – 2 கப், வெல்லம் – ஒன்றே கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், முந்திரி – கால் கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை எடுத்து கொதிக்க வைத்து, மாவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். வெல்லத்தை பாகு வைத்து (மிகவும் கெட்டியாக இல்லாத பதத்தில்) மாவுடன் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, தேங்காய் துருவலை வறுத்து அதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரையில் கிளறவும். வெண்ணெய் போல் திரண்டு வரும்போது தட்டில் போட்டு துண்டுகளாக்கவும்.

Read Previous

பல்நோய் குணமடையும் அற்புத மருந்து மகிழம்பூ..!!

Read Next

பாத வலி, மூட்டு வலியை நீக்க வேண்டுமா..?? கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular