வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி ..??

Oplus_131072

வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி …..

 

தேவையானவை:

வெந்தயக்கீரை – 2 சிறுகட்டு, துவரம்பருப்பு – ஒரு கப், புளி – எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:

துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்……

குறிப்பு: வெந்தயக்கீரை குளிர்ச்சி தரும்; வயிற்றுப்புண் ஆற்றும்…….

 

Read Previous

கடற்கரையில் பெண்கள் சடலம் – அதிர்ச்சி தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular