வெறும் பழமல்ல, இது ‘அருமருந்து’! – பேரீச்சம்பழத்தில் ஒளிந்திருக்கும் அளப்பரிய சக்திகள்..!!

 

ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும்போது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை முறிக்க அனைத்து முஸ்லிம்களுமே பேரீட்சம் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நோன்பு திறக்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது இதற்கு என்ன காரணம்?

பேரீட்சை அளப்பரிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் நாள் முழுவதும் விரதம் இருந்து சோர்வாக காணப்படும் உடலுக்கு விரைவில் சக்தியை வழங்கும் ஆற்றல் பேரீட்சம் பழத்திற்கு இருப்பதுதான்

பேரிச்சையில் நல்ல அளவு குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளன. அதுவே சோர்வாக இருக்கும்போது, 2-3 பேரிச்சை சாப்பிடுவது உடனடி ஆற்றலை அளிக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பெருங்குடலை சத்தமாக வைத்திருக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது.

ரமலான் பண்டிகையின் முக்கிய உணவுகளில் தவறாமல் இடம் பெறுவது பேரீச்சம் பழம்தான். அந்த பழங்களில் பல வகைகளும் உள்ளன. பேரீச்சம் பழங்களில் உலகளவில் ராஜா மற்றும் ராணி ரக பழங்கள் கூட உண்டு. வாருங்கள் அவற்றை பார்ப்போம்..

மெட்ஜூல் (Medjool) பேரிச்சம்பழங்கள் ‘மெராக்கோ நாட்டிலிருந்து வருகிறது. இதுவே’ பேரீச்சம்பழங்களின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் பெரிய அளவு மென்மையான தடிமனான அமைப்பு மற்றும் இயற்கையான கேரமல் சுவைக்கு பெயர் பெற்ற பிரீமியம் வகையாகும். திரட்சையான பளபளப்பான தோற்றம் மற்றும் வாயில் போட்டவுடன் கரையும் தன்மை மற்றும் சுவை காரணமாக இது சிறந்ததாக கருதப்படுகிறது.

டெகிலெட் நூர் (Deglet Noor) வகை அல்ஜீரியா மற்றும் துனீசியா நாட்டிலிருந்து வருகிறது. பேரீச்சம்பழம் நடுத்தர அளவிலானது, குறுகிய நீளமான வடிவம் கொண்டது. அவை அரை உலர்ந்த அமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் மெட்ஜூல் பேரீச்சம்பழத்தைவிட குறைவான சர்க்கரையைக் கொண்டுள்ளன. இதனை ‘பேரீச்சம் பழங்களின் ராணி ‘ என்கிறார்கள். டெகிலெட் நூர் பேரீச்சம்பழம் அதன் மிதமான இனிப்பு மற்றும் உறுதியான தன்மை காரணமாக சமையல் மற்றும் பேக்கிங்கிற்கு நன்றாக உதவுகிறது.

அஜ்வா பேரீச்சம்பழம் (Ajwa Dates) சவூதி அரேபியாவின் மதீனா நகரில் விளையும் மிகவும் பிரீமியம் மற்றும் சத்தான பேரீச்சம்பழ வகை. கரும் பழுப்பு நிறம், மென்மையான அமைப்பு மற்றும் பிரத்யேக சுவைக்கு பெயர் பெற்றது. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இது இதயம் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சுக்காரி பேரீச்சம்பழம் (Sukkari Dates) சவூதி அரேபியாவின் மதீனா பகுதியைச் சேர்ந்த. கேரமல் போன்ற சுவை தங்க பழுப்பு நிறம் மற்றும் மென்மையான தன்மைக்கு பெயர் பெற்ற பிரீமியம் ரகமாகும். இவை இயற்கையான சர்க்கரை (சுமார் 78%) நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டி. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சரும ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உடனடி ஆற்றலுக்கும் இது உதவுகிறது.

பர்ஹி (Barhi) ஈராக் நாட்டிலிருந்து வரும் பேரீச்சம்பழம் சிறியதாகவும், வட்டமாகவும், இனிப்பாகவும் இருக்கும். பெரும்பாலும் பட்டர்ஸ்காட்ச் அல்லது கேரமல் சுவை கொண்டது. மஞ்சள் மற்றும் தங்க நிறத்தில் ஆரம்பத்தில் இருந்து நன்கு முதிர்ந்தவுடன் பழுப்பு நிறத்தில் காணப்படும். மென்மையான தன்மை கொண்டது. இவை ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் வரை கிடைக்கும். நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பிரீமியம் பேரீச்சம்பழம். ஈராக் தவிர்த்து மத்திய கிழக்கில் பரவலாக பயிரிடப்படுகிறது.

மசாபாதி (Mazafati) பேரீச்சம்பழங்கள் முக்கியமாக ஈரானின் பாம் (Bam) பகுதியில் விளையும் ஒரு உயர்தர மென்மையான சதைப்பற்றுள்ள மற்றும் கருமையான நிறமுள்ள பேரீச்சம்பழ வகை ஆகும். இவை இயற்கையான இனிப்புடன், 15-35% அதிக ஈரப்பதம் கொண்டவை. இது “பாம் பேரிச்சை” அல்லது கிமியா (Kimia) என்றும் அழைக்கப்படுகிறது.

கஜூர் (Khajur) பேரீச்சம்பழம் இந்திய பகுதிகளில் விளையும் குளிர்காலத்திற்கு ஏற்ற சத்துமிக்க சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான உணவு. இது இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஸ்டஃப்டு டேட்ஸ்ரோல்ஸ் லட்டு மற்றும் கீர் போன்ற சுவையான இனிப்பு வகைகள் தயாரிக்க இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கஜூர் குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பத்தையும் ஊட்டச்சத்தையும் தருகிறது.

Read Previous

வெந்தயம் சாப்பிடுங்க..!! சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க..!!

Read Next

பெண்கள் ஏன் ருத்ராட்சம் அணியக்கூடாது.. தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular