வெற்றிலையில் இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருக்கிறதா..?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!!
வெற்றிலை என்பது தாம்பூலத்திற்கு வைக்கப்படுவதில் மட்டும் அல்லாமல் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது அதை பற்றி நாம் இந்த பதிவு பார்க்கலாம். ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலைகளை சேர்த்து நன்றாக கசக்கி சாறு எடுத்து அதில் பத்து சொட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி இருமல் முற்றிலுமாக குணமாகும்.
மேலும் வெற்றிலையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு புரதம், அயோடின் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. பக்கவாதம் மற்றும் இதய நோய் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது உதவுகிறது. மேலும் புண்கள் மற்றும் காயங்கள் மீது வெற்றிலையை அரைத்து தடவினால் விரைவில் குணமாகும். பர்சத்தை மற்றும் பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இது தடுக்கும். சிறுநீரக நச்சுக்களை நீக்கி உடல் நலத்தை மேம்படுத்தும். வயிற்றில் இருக்கும் வாயு நீங்குவதற்கு இது மிகவும் உதவுகிறது. வெற்றிலை சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். கிருமி நாசினியாக கூட இந்த வெற்றிலை செயல்படும். சுவாச நோய்கள் குணமாகும். மேலும் வெற்றிலையில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து கழிவுகளாக வெளியேற்றுவதற்கு வெற்றிலை உதவுகிறது.




