வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உணவு உண்டபின் வெற்றிலை போடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். தற்போது உள்ள காலகட்டத்தில் வெற்றிலை போடுவது நாகரிகமற்ற செயல் என்று கருதி, அந்த பழக்கத்தை கைவிட்டு வருகிறார்கள். ஆனால் வெற்றிலையில் பல நன்மைகள் இருக்கின்றன. அது குறித்து கீழே விரிவாக காணலாம்.
அதாவது வெற்றிலையில், பல விதமான சத்துக்கள் இருந்தாலும், இது உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு வெற்றிலையில் 3 மிளகு , 5 உலர்திராட்சை கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை குறையும். மேலும், குழந்தைகளுக்கு வெற்றிலை மற்றும் 3 மிளகு சேர்த்து சாறாக பிழிந்து கொடுத்தால் சளியை அகற்றிவிடும்.




