சென்னை பெங்களூரில் வாழும் பேச்சுலர் அவர்களே இந்த குழம்பு பொடி நீங்களே அரைத்து கொள்ளலாம்..
குழம்பு பொடி:
தேவையான பொருள்கள் –
மிளகாய் வத்தல் -20
கொத்தமல்லி – 50 கிராம்
மிளகு – 3 மேஜைக்கரண்டி
சீரகம் – 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை –
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு மூன்றையும் போட்டு வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு சீரகம், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் போட்டு திரிக்கவும். திரித்த பொடியை ஒரு பேப்பரில் பரப்பி ஆறவிடவும்.
ஆறியபின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். குழம்பு பொடி ரெடி.




